< Back
கிரிக்கெட்
ஜெய்ஸ்வால் உடனான பார்ட்னர்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசிய கெய்க்வாட்!

image courtesy; AFP

கிரிக்கெட்

ஜெய்ஸ்வால் உடனான பார்ட்னர்ஷிப் குறித்து வெளிப்படையாக பேசிய கெய்க்வாட்!

தினத்தந்தி
|
10 Dec 2023 4:56 PM IST

இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

மும்பை,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இதில் இந்தியா-தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி டர்பனில் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

இந்நிலையில் தம்முடன் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்கும் ஜெய்ஸ்வால் உடனான பார்ட்னர்ஷிப் குறித்து ருதுராஜ் கெய்க்வாட் வெளிப்படையாக பேசியுள்ளார். இது குறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் அவர் பேசியது பின்வருமாறு;-

"ஜெய்ஸ்வால் பெரும்பாலும் முதல் பந்திலிருந்தே அட்டாக் செய்யும் ஷாட்களை அடித்து பேட்டிங் செய்யக் கூடியவர். அவர் நின்று நிதானமாக விளையாடக் கூடியவர் அல்ல. எனவே நான் மறுபுறம் அந்த சூழலில் அணிக்கு என்ன தேவை என்பதை அறிந்து விளையாட முயற்சிக்கிறேன். ஏனெனில் எதிர்ப்புறம் ஜெய்ஸ்வால் எப்படியும் அதிரடியாக விளையாட முயற்சிப்பார். அதனால் மறுமுனையில் நிலையாக நின்று அவர் அதிரடியாக விளையாடுவதற்கான வழியை செய்து கொடுப்பது என்னுடைய வேலையாகும். அவருடன் நான் மகிழ்ச்சியுடன் பேட்டிங் செய்கிறேன்" என்று கூறினார்.

மேலும் செய்திகள்