< Back
கிரிக்கெட்
ரஷித் கானின் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரர்... வீடியோ வைரல்
கிரிக்கெட்

ரஷித் கானின் ஒரே ஓவரில் 5 சிக்சர்களை பறக்க விட்ட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரர்... வீடியோ வைரல்

தினத்தந்தி
|
11 Aug 2024 12:01 PM IST

இங்கிலாந்தில் ஹண்ட்ரட் தொடர் நடைபெற்று வருகிறது.

சவுத்தாம்ப்டன்,

இங்கிலாந்தில் ஹண்ட்ரட் (100 பந்துகள்) தொடர் நடைபெற்று வருகிறது. அந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற 24வது லீக் ஆட்டத்தில் டிரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சவுத்தர்ன் பிரேவ் அணிகள் மோதின.

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த டிரெண்ட் ராக்கெட்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 100 பந்துகளில் 8 விக்கெட்டுகளை இழந்து126 ரன்கள் குவித்தது.

இதனையடுத்து 127 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை துரத்திய சவுத்தர்ன் பிரேவ்ஸ் அணிக்கு வெற்றி பெற கடைசி 20 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டபோது உலகின் நம்பர் 1 டி20 ஸ்பின்னராக கருதப்படும் ரஷித் கான் பந்து வீசினார். ஆனால் அவர் வீசிய 5 பந்துகளை (ஒரு ஓவருக்கு 5 பந்துகள்) எதிர்கொண்ட வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் அதிரடி வீரர் பொல்லார்ட் அடுத்தடுத்து 5 சிக்சர்களைப் பறக்க விட்டார்.

இவரது அதிரடியால் சவுத்தர்ன் பிரேவ்ஸ் 8 விக்கெட்டுகளை இழந்து 127 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அந்த அணிக்கு வெற்றியை பெற்றுக் கொடுத்த பொல்லார்ட் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

ரஷித் கானின் ஒரே ஓவரில் 5 சிக்சர்கள் பறக்க விட்ட பொல்லார்டின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்