< Back
கிரிக்கெட்
கார் விபத்தில் சிக்கிய இலங்கை முன்னாள் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

கோப்புப்படம் 

கிரிக்கெட்

கார் விபத்தில் சிக்கிய இலங்கை முன்னாள் வீரர் - ரசிகர்கள் அதிர்ச்சி

தினத்தந்தி
|
15 March 2024 10:56 AM IST

இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான திரிமன்னே கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கொழும்பு,

இலங்கையை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரரான திரிமன்னே கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 34 வயதாகும் திரிமன்னே இலங்கையில் உள்ள அனுராதபுரம் என்கிற பகுதியில் காரில் நண்பர்களுடன் யாத்திரைக்கு சென்றபோது எதிரே வந்த லாரியின் மீது அவரது கார் மோதி இருக்கிறது.

இதனால் படுகாயம் அடைந்த அவர் உடனடியாக அருகில் இருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இலங்கை அணிக்காக கடந்த 2010-ஆம் ஆண்டு அறிமுகமான லஹிரு திரிமன்னே இதுவரை அந்த அணிக்காக 44 டெஸ்ட் போட்டிகள், 127 ஒருநாள் போட்டிகள் மற்றும் 26 டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடியுள்ளார்.

மூன்று வகையான இலங்கை அணியிலும் இடம்பெற்று விளையாடி வந்த திரிமன்னே கடந்த 2014-ஆம் ஆண்டு இலங்கை அணி டி20 உலக கோப்பையை வென்ற போது அந்த அணியில் இடம் பிடித்திருந்தவர். அதோடு மட்டுமில்லாமல் இரண்டு முறை இலங்கை 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் போதும் அந்த அணியில் இடம் பிடித்து விளையாடி இருந்தார்.

கடந்த 13 ஆண்டுகளாக இலங்கை அணிக்காக விளையாடி வந்த அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாகவே எவ்வித போட்டிகளிலும் வாய்ப்பு கிடைக்காமல் விரக்தியில் இருந்த வேளையில் கடந்த ஜூலை மாதம் தான் ஓய்வினையும் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்