பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மரணம்
|பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பில்லி இபதுல்லா நேற்று மரணம் அடைந்தார்.
லாகூர்,
பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பில்லி இபதுல்லா (வயது 88) நேற்று மரணம் அடைந்தார். டெஸ்டில் பாகிஸ்தான் அணிக்காக அறிமுக இன்னிங்சிலேயே சதம் அடித்த சாதனையாளர். பாகிஸ்தான் கிரிக்கெட்டின் முன்னாள் ஆல்-ரவுண்டர் பில்லி இபதுல்லா (வயது 88) நேற்று மரணம் அடைந்தார்.
1964-ம் ஆண்டு கராச்சியில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த டெஸ்டில் 166 ரன்கள் குவித்தார். இந்த டெஸ்டில் அவரும், மற்றொரு புதுமுக வீரர் அப்துல் காதிரும் முதல் விக்கெட்டுக்கு 249 ரன்கள் எடுத்தனர். இந்த நாள் வரைக்கும் இருஅறிமுக வீரர்கள் ஜோடியாக எடுத்த அதிகபட்ச பார்ட்னர்ஷிப்பாக நீடிக்கிறது. மொத்தம் 4 டெஸ்ட் மட்டுமே ஆடிய இபதுல்லா ஒரு சதம் உள்பட 253 ரன் எடுத்தார்.
இவரது மறைவை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூரவ எக்ஸ் வலைதள பக்கத்தில் அறிவித்து இரங்கல் தெரிவித்துள்ளது.