இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சலீம் துரானி மறைவுக்கு கிரிக்கெட் வீரர்கள் இரங்கல்
|அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
அகமதாபாத்,
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சலீம் துரானி உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த சம்பவம் ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் தனது இளைய சகோதரர் ஜஹாங்கீர் துராணியுடன் குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வசித்து வந்தார்.
கடந்த 1934 ஆம் ஆண்டு டிசம்பர் 11 ஆம் தேதி ஆப்கானிஸ்தானின் காபூல் நகரில் பிறந்த சலீம் துரானி இந்திய டெஸ்ட் அணிக்காக மட்டுமே விளையாடியுள்ளார். இடது கை ஆட்டக்காரரான அவர், 25 வயதில் 1960 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஆஸ்திரேலிய அணிக்காக தனது முதல் போட்டியில் களமிறங்கினார்.
அவர் நாட்டிற்காக விளையாடிய 50 இன்னிங்ஸில் 7 அரைசதங்களுடன் 1,202 ரன்கள் எடுத்திருந்தார். கடைசியாக 1973 ஆம் ஆண்டு பிப்ரவரி 6 ஆம் தேதி இங்கிலாந்து அணிக்கெதிரான கடைசியாக விளையாடினார்.
அவரது மறைவுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ரவிசாஸ்திரி, விவிஎஸ் லஷ்மண் மற்றும் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.