இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் மரணம்... ரசிகர்கள் அதிர்ச்சி
|இவர் இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய பெருமைக்குரியவர்.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மற்றும் பயிற்சியாளர் ஆன கிரகாம் தோர்ப் (வயது 55) உடல்நலக்குறைவு காரணமாக இன்று மரணமடைந்தார். இதனை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் அறிவித்துள்ளது.
இவர் இங்கிலாந்து அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 6744 ரன்கள் குவித்துள்ளார்.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பின் இங்கிலாந்து அணிக்கு பயிற்சியாளராகவும் செயல்பட்டுள்ளார். இவர் கடைசியாக 2021 -2022-ல் நடைபெற்ற ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியின் துணை பயிற்சியாளராக செயல்பட்டார். அதன்பின் ஆப்கானிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டார். இருப்பினும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் அந்த பதவியை ஏற்கவில்லை.
இந்நிலையில் உடல்நலக்குறைவு காரணமாக அவர் இன்று மரணமடைந்தார். அவரது மறைவு பல ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.