< Back
கிரிக்கெட்
பாம்பு பிடி வீரராக மாறிய  முன்னாள் கிரிக்கெட் வீரர்...!!
கிரிக்கெட்

பாம்பு பிடி வீரராக மாறிய முன்னாள் கிரிக்கெட் வீரர்...!!

தினத்தந்தி
|
8 Sept 2023 12:33 PM IST

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் மெக்ராத் தனது வீட்டிற்குள் புகுந்த பாம்பை துணிச்சலாக பிடிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சிட்னி,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ராத். இவர் விளையாடிய காலகட்டத்தில் மிகவும் திறமையான பந்துவீச்சாளராக வலம் வந்தார். தொடர்ச்சியாக மூன்று ஒருநாள் உலகக்கோப்பைகளை வென்ற ஆஸ்திரேலிய அணியில் இடம் பிடித்திருந்தார்.

இவர் தற்போது தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவர் பாம்பு பிடிக்கும் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். அதில், அவரது வீட்டிற்குள் புகுந்த பாம்பு ஒன்றை துடைப்பத்தின் உதவியுடன் லாவகமாக பிடிக்கும் காட்சிகள் இடம்பெற்றிருந்தன.

மேலும் அதில், அவருடைய மனைவியின் ஏராளமான ஊக்கம் மற்றும் ஆதரவிற்கு பிறகு, வீட்டிற்குள் புகுந்த 3 மலைப்பாம்புகளும் பாதுகாப்பாக மீண்டும் புதரில் விடப்பட்டன என்ற தலைப்பும் இடம்பெற்றிருந்தது. தற்போது அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்