< Back
கிரிக்கெட்
டீன் எல்கரை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் அறிவிப்பு...!
கிரிக்கெட்

டீன் எல்கரை தொடர்ந்து சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தென் ஆப்பிரிக்க வீரர் அறிவிப்பு...!

தினத்தந்தி
|
8 Jan 2024 1:47 PM IST

சமீபத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.

கேப்டவுன்,

சமீபத்தில் இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இந்த டெஸ்ட் தொடருடன் தென் ஆப்பிரிக்க அணியின் நட்சத்திர வீரர் டீன் எல்கர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்கா ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி தரும் செய்தியாக அந்த அணியின் முன்னணி விக்கெட் கீப்பர் ஹென்ரிச் கிளாசனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக தற்போது அறிவித்துள்ளார். ஆனால் ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டை தொடர்ந்து ஆடுவேன் என தெரிவித்துள்ளார்.

32 வயதான ஹென்ரிச் கிளாசன் தென் ஆப்பிரிக்க அணிக்காக இதுவரை 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 104 ரன்கள் அடித்துள்ளார். இவர் கடந்த 2019ம் ஆண்டில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுகம் ஆனார். கடைசியாக இவர் கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆடினார்.

ஏற்கனவே, தென் ஆப்பிரிக்க அணியின் அதிரடி தொடக்க ஆட்டக்காரரான டி காக் கடந்த 2021 டிசம்பரில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் தற்போது கிளாசனும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்