ஐபிஎல் வரலாற்றில் முதல் முறை....அர்ஜூன் டெண்டுல்கருக்கு கிடைத்த பெருமை...!
|ஐபிஎல் தொடரில் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன
மும்பை,
ஐபிஎல் தொடரில் இன்றைய முதலாவது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்கள் மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்தில் உடல்நலக்குறைவு காரணமாக மும்பை கேப்டன் ரோகித் சர்மா ஆடவில்லை. அவருக்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் அணியை வழிநடத்துகிறார்.
ரோகித் சர்மா இம்பேக் பிளேயராக களம் இறங்கும் வகையில் வெளியில் அமர வைக்கப்பட்டுள்ளார். இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர பேட்ஸ்மேனான சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் களம் இறக்கப்பட்டுள்ளார்.
கடந்த இரு சீசன்களாக மும்பை அணியில் அங்கம் வகித்த அவருக்கு இந்த ஆட்டத்தின் மூலம் ஐபிஎல் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் களம் இறங்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த ஆட்டத்தில் பிளேயிங் லெவனில் இடம் பெற்றதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக தந்தையும் (சச்சின் டெண்டுல்கர்), மகனும் (அர்ஜூன் டெண்டுல்கர்) ஒரே அணிக்காக ஐபிஎல் தொடரில் தங்களது முதல் போட்டியை ஆடி உள்ளனர்.
இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையக தந்தையும், மகனும் ஒரே அணிக்காக களம் இறங்கி உள்ள புதிய வரலாறு படைக்கப்பட்டுள்ளது.