முதலாவது டெஸ்ட்; இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு..!
|இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.
செஞ்சூரியன்,
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெறுகிறது. இதனிடையே அங்கு மழை பெய்ததன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில் அங்கு மழை நின்றவுடன் டாஸ் சுண்டப்பட்டது. அதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்திய அணியில் பிரசித் கிருஷ்ணா அறிமுக வீரராக இடம்பெற்றுள்ளார்.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
தென் ஆப்பிரிக்கா: டீன் எல்கர், ஐடன் மார்க்ரம், டோனி டி ஜோர்ஜி, டெம்பா பவுமா(கேப்டன்), கீகன் பீட்டர்சன், டேவிட் பெடிங்ஹாம், கைல் வெர்ரைன் மார்கோ ஜான்சன், ஜெரால்ட் கோட்ஸி, ககிசோ ரபாடா, நந்த்ரே பர்கர்
இந்தியா : ரோஹித் ஷர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் , ரவிச்சந்திரன் அஷ்வின், ஷர்துல் தாக்கூர், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா