இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதல் டெஸ்ட் போட்டி; ஐதராபாத்தில் நாளை தொடக்கம்
|நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது
ஐதராபாத்,
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆட உள்ளது. இந்த தொடரின் முதலாவது போட்டி நாளை ஐதராபாத்தில் தொடங்குகிறது.
இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும், பும்ரா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்திய அணி சொந்த மண்ணில் விளையாடுவதால் இங்கிலாந்துக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தலாம் என்று எதிர் பார்க்கப்படுகிறது.உலகின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி முதல் 2 போட்டியில் தனிப்பட்ட காரணத்துக்காக விளையாடவில்லை. இது பேட்டிங்கில் சற்று பாதிப்பை ஏற்படுத்தலாம். விராட் கோலிக்கு பதிலாக பதிலாக ரஜத் படிதார் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
சுழற்பந்து வீரர்களான அஸ்வின், ஜடஜா இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார்கள என எதிர்பார்க்கப்படுகிறது.
இங்கிலாந்து அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சமபலத்துடன் திகழ்கிறது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், பேர்ஸ்டோவ், கிரவுலி, பென் டக்கெட், ஜேம்ஸ் ஆண்டர்சன் போன்ற சிறந்த வீரர்கள் அந்த அணியில் உள்ளனர்.
நாளைய டெஸ்ட் போட்டி காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. 'ஸ்போர்ட்ஸ் 18' சேனனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.