முதல் டெஸ்ட் போட்டி; ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளின் பிளேயிங் லெவன் அறிவிப்பு...!
|ஆஸ்திரேலியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
அடிலெய்டு,
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது. இதில் முதலாவது, டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் நாளை நடைபெற உள்ள டெஸ்ட் போட்டிக்கான தங்களது பிளேயிங் லெவனை இரு அணிகளும் அறிவித்துள்ளன. இதில் கடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருடன் ஓய்வு பெற்ற டேவிட் வார்னருக்கு பதிலாக ஸ்டீவ் ஸ்மித் ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா பிளேயிங் லெவன்; உஸ்மான் கவாஜா, ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஸ்சாக்னே, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ்கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.
வெஸ்ட் இண்டீஸ் பிளேயிங் லெவன்; கிரேக் பிராத்வைட் (கேப்டன்), டேகனரைன் சந்தர்பால், கிர்க் மெக்கென்சி, அலிக் அதானாஸ், கவேம் ஹாட்ஜ், ஜஸ்டின் கிரீவ்ஸ், ஜோசுவா டா சில்வா (விக்கெட் கீப்பர்), குடாகேஷ் மோட்டி, அல்சாரி ஜோசப், ஷமர் ஜோசப், கெமர் ரோச்.