< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட்; மழையால் டாஸ் போடுவதில் தாமதம்...!
|26 Dec 2023 1:14 PM IST
இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற உள்ளது.
செஞ்சூரியன்,
இந்திய கிரிக்கெட் அணி தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. அந்த நாட்டு அணிக்கு எதிரான 20 ஓவர் தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்த இந்திய அணி, ஒரு நாள் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. அடுத்ததாக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது.
அதன்படி இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று நடைபெற உள்ளது. இந்நிலையில் அங்கு மழை பெய்வதன் காரணமாக டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
செஞ்சூரியனில் போட்டி நடைபெறும் முதல் இரு நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.