< Back
கிரிக்கெட்
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா

Image Courtesy: ICC Twitter

கிரிக்கெட்

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்; விளையாடும் வீரர்களை அறிவித்த ஆஸ்திரேலியா

தினத்தந்தி
|
28 Feb 2024 10:32 AM IST

ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.

வெல்லிங்டன்,

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதலாவது போட்டி நாளை வெல்லிங்டனில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்த போட்டியில் விளையாடும் 11 பேர் கொண்ட அணியை ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.

இந்த அணியில் ஸ்டீவ் சுமித் மற்றும் உஸ்மான் கவாஜா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக இடம் பெற்றுள்ளனர்.

ஆஸ்திரேலிய அணி விவரம்; ஸ்டீவ் சுமித், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஸ்சாக்னே, கேமரூன் க்ரீன், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி (விக்க்ர்ட் கீப்பர்), பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன், ஜோஷ் ஹேசில்வுட்.

மேலும் செய்திகள்