< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டி20: விளையாடும் வீரர்களை அறிவித்த இங்கிலாந்து அணி
|11 Sept 2024 4:27 AM IST
ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார்
லண்டன் ,
ஆஸ்திரேலிய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்த போட்டிக்கான விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அணி அறிவித்துள்ளது.
காயம் காரணமாக ஜோஸ் பட்லர் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து விலகியுள்ளார். பில் சால்ட் இங்கிலாந்து அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து அணி:
பில் சால்ட், வில் ஜாக்ஸ், ஜோர்டான் காக்ஸ், லிவிங்ஸ்டன், பெத்தெல், சாம் கரன் , ஓவர்டன், ஜோப்ரா ஆர்ச்சர், ஆதில் ரஷீத், சாக்யூப் மஹ்முத் ,ரீஸ் டாப்ளே.