< Back
கிரிக்கெட்
முதலாவது டி20: அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்
கிரிக்கெட்

முதலாவது டி20: அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் இன்று மோதல்

தினத்தந்தி
|
10 May 2024 2:39 AM IST

அயர்லாந்து - பாகிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது.

டப்ளின்,

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் ஜூன் 1-ந் தேதி தொடங்கும் 9-வது டி20 உலகக்கோப்பை தொடருக்கு தயாராகும் பொருட்டு பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து அந்த நாட்டு அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது.

அதன்படி அயர்லாந்து - பாகிஸ்தான் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று (வெள்ளிக்கிழமை) டப்ளின் நகரில் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

மேலும் செய்திகள்