< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி:  ஹர்த்திக் பாண்ட்யா அதிரடி -  இந்தியா 208 ரன்கள் குவிப்பு

Image Courtesy: BCCI Twitter 

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: ஹர்த்திக் பாண்ட்யா அதிரடி - இந்தியா 208 ரன்கள் குவிப்பு

தினத்தந்தி
|
20 Sept 2022 8:50 PM IST

முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது இந்திய அணி.

மொகாலி,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடுகிறது. இத்தொடரின் முதலாவது போட்டி மொகாலியில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக கேப்டன் ரோகித், கே.எல்.ராகுல் ஆகியோர் களம் இறங்கினர்.

முதல் விக்கெட்டுக்கு 21 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேப்டன் ரோகித் சர்மா 11 ரன்களில் ஆட்டம் இழந்தார். அடுத்து பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி 2 ரன்களுக்கு ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். அதன் பின்னர் 3 விக்கெட்டுக்கு ராகுலுடன் சூர்ய குமார் யாதவ் ஜோடி சேர்ந்தார்.

இந்த இணை அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை வேகமான ஏற்றினர். அதிரடியாக ஆடிய ராகுல் அரைசதம் அடித்தார். 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் சேர்த்திருந்த நிலையில் இந்த ஜோடி பிரிந்தது. அரைசதம் அடித்த ராகுல் 55 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். ராகுல் ஆட்டம் இழந்த சிறிது நேரத்திலேயே சூர்ய குமார் யாதவும் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

அடுத்து ஹர்த்திக் பாண்ட்யா, அக்‌ஷர் ஜோடி சேர்ந்தனர். இதில் அக்‌ஷர் பட்டேல் 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து பாண்ட்யாவுடன் தினேஷ் கார்த்திக் ஜோடி சேர்ந்தார். இதில் கார்த்திக் 6 ரன்களுக்கு ஆட்டம் இழந்தார். அடுத்து ஹர்சல் பட்டேல் களம் இறங்கினார். அதிரடியாக ஆடிய ஹர்த்திக் அரைசதம் அடித்தார். இந்திய அணி தரப்பில் பாண்ட்யா 30 பந்துகளில் 71 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் குவித்தது. இதையடுத்து 209 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குக்டன் ஆஸ்திரேலிய அணி ஆட உள்ளது.

மேலும் செய்திகள்