முதல் டி20 போட்டி; ரசல் - பவல் அதிரடி...இங்கிலாந்தை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்...!
|வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ரசல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
பார்படாஸ்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி கைப்பற்றியது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை முதலாவது டி20 போட்டி நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 171 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.
இங்கிலாந்து தரப்பில் சால்ட் 40 ரன்களும், படலர் 39 ரன்களும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அல்ஜாரி ஜோசப், ரசல் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 172 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 18.1 ஓவர்களில் 6 விக்கெட்டை மட்டும் இழந்து 172 ரன்கள் எடுத்து 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ஷாய் ஹோப் 36 ரன்னும், மேயர்ஸ் 35 ரன்னும், அதிரடியாக ஆடிய பவல் 15 பந்தில் 31 ரன்னும், ரசல் 14 பந்தில் 29 ரன்னும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2வது டி20 போட்டி இந்திய நேரப்படி நாளை இரவு 11 மணிக்கு நடைபெற உள்ளது.