< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி: ரோவ்மன் பவல் அதிரடி ஆட்டம்...தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்...!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: ரோவ்மன் பவல் அதிரடி ஆட்டம்...தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ்...!

தினத்தந்தி
|
26 March 2023 6:36 AM IST

முதலாவது டி20 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது.

சென்சூரியன்,

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் அணி அங்கு 2-0 என டெஸ்ட் தொடரை இழந்தது. 1-1 என ஒருநாள் தொடர் சமன் செய்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற முதலாவது டி20 போட்டியில் மழை காரணமாக ஆட்டம் 11 ஓவர்களாக குறைக்கப்பட்டது. இந்த ஆட்டத்தில் முதலாவதாக பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணி 11 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டேவிட் மில்லர் 22 பந்தில் 48 ரன்கள் எடுத்தார்.

இதையடுத்து 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களம் புகுந்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் புகுந்த பிரண்டன் கிங் 8 பந்தில் 23 ரன்னும், கைல் மேயர்ஸ் 6 ரன்னிலும் வீழ்ந்தனர். இதையடுத்து களம் இறங்கிய சார்லஸ் 28 ரன், பூரன் 16 ரன் எடுத்து அவுட் ஆகினர்.

இறுதியில் அந்த அணி 10.3 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. அந்த அணியின் வெற்றிக்கு கேப்டன் பவல் பக்க பலமாக இருந்தார். அவர் 18 பந்தில் 5 சிக்சருடன் 43 ரன் குவித்து அசத்தினார். இந்த வெற்றியின் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என வெஸ்ட் இண்டீஸ் முன்னிலையில் உள்ளது.


மேலும் செய்திகள்