< Back
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்..!

Image Courtesy: AFP

கிரிக்கெட்

முதல் டி20 போட்டி: இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகள் நாளை மோதல்..!

தினத்தந்தி
|
9 Dec 2023 9:10 PM IST

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

டர்பன்,

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரை 4-1 என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணி அடுத்ததாக தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆட உள்ளது.

இதில் முதலாவதாக டி20 தொடர் நடைபெற உள்ளது. முதலாவது டி20 போட்டி டர்பனில் நாளை நடைபெற உள்ளது. டி20 தொடருக்கான இந்திய அணியில் சீனியர் வீரர்களான ரோகித், கோலி, ராகுல், பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது,

சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இளம் வீரர்களை கொண்ட டி20 அணி நாளை தென் ஆப்பிரிக்காவை சந்திக்க உள்ளது. இந்திய நேரப்படி ஆட்டம் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

மேலும் செய்திகள்