< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
முதல் டி20 போட்டி; ஆப்கானிஸ்தான் - யுஏஇ அணிகள் இன்று மோதல்..!
|29 Dec 2023 5:05 PM IST
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது.
ஷார்ஜா,
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி யுஏஇ-யில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டி20 போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
யுஏஇ-க்கு எதிரான டி20 தொடர் நிறைவடைந்ததும் ஆப்கானிஸ்தான் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆட உள்ளது. எனவே இந்திய தொடருக்கு தங்களை தயார்படுத்துவதற்கு ஆப்கானிஸ்தான் அணியினர் இந்த தொடரை பயன்படுத்தி கொள்வர் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளையில் ஆப்கானிஸ்தானுக்கு அதிர்ச்சி அளிக்க யுஏஇ கடுமையாக முயற்சிக்கும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.