முதலாவது டி20 கிரிக்கெட்: டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு..!
|இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி இன்று நடைபெறுகிறது.
மொகாலி,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. இதன்படி இந்தியா- ஆப்கானிஸ்தான் இடையிலான முதலாவது டி20 போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று நடைபெறுகிறது.
இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சு தேர்வு செய்துள்ளது. அதன்படி ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.
இரு அணிகளுக்கான பிளேயிங் 11 பின்வருமாறு;-
இந்தியா; ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், திலக் வர்மா, ஷிவம் துபே, ஜிதேஷ் சர்மா, ரிங்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகேஷ் குமார்
ஆப்கானிஸ்தான்; ரஹ்மானுல்லா குர்பாஸ், இப்ராஹிம் சத்ரன் (கேப்டன்), ரஹ்மத் ஷா, அஸ்மத்துல்லா உமர்சாய், முகமது நபி, நஜிபுல்லா ஜத்ரான், கரீம் ஜனத், குல்பாடின் நைப், பசல்ஹக் பரூக்கி, நவீன் உல் ஹக், முஜீப் உர் ரஹ்மான்