< Back
கிரிக்கெட்
முதலாவது தகுதி சுற்று; டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

Image Courtesy: @IPL

கிரிக்கெட்

முதலாவது தகுதி சுற்று; டாஸ் வென்ற ஐதராபாத் பேட்டிங் தேர்வு

தினத்தந்தி
|
21 May 2024 7:05 PM IST

இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

அகமதாபாத்,

10 அணிகள் கலந்து கொண்ட 17வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் லீக் ஆட்டங்கள் கடந்த 19-ம் தேதியுடன் நிறைவடைந்தன. லீக் சுற்று ஆட்டங்களின் முடிவில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின.

இந்நிலையில் பிளே ஆப் சுற்றில் இன்று நடைபெறும் முதலாவது தகுதி சுற்று ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் அகமதாபாத்தில் மோத உள்ளன. இதையடுத்து இந்த ஆட்டத்திற்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்