டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் - ஷதாப் கான் சாதனை...!
|டி20 கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை ஷதாப் கான் படைத்துள்ளார்.
ஷார்ஜா,
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் நடைபெற்றது. இதில் ஆப்கானிஸ்தான் அணி முதல் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் இரு அணிகளுக்கு இடையேயான கடைசி டி20 போட்டி நேற்று நடைபெற்றது.
இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்கள் எடுத்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் முஜீப் உர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், பாரூக்கி, நபி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 116 ரன்னில் ஆல்-அவுட் ஆனது. பாகிஸ்தான் தரப்பில் ஷதாப் கான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆட்டநாயகனாக ஷதாப் கான் தேர்வு செய்யப்பட்டார். இந்த போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் சர்வதேச டி20 போட்டிகளில் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார்.