< Back
கிரிக்கெட்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு
கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி: டாஸ் வென்ற இந்தியா பந்துவீச்சு தேர்வு

தினத்தந்தி
|
17 March 2023 1:18 PM IST

இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் அரங்கேறுகிறது.

மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி டெஸ்ட் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.

இதன்படி இந்தியா- ஆஸ்திரேலியா இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி பகல்-இரவு மோதலாக மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. ரோகித் சர்மா சொந்த காரணங்களுக்காக போட்டியில் இருந்து விலகியுள்ளதால், அணியை ஹர்திக் பாண்ட்யா வழிநடத்துகிறார்.

மேலும் செய்திகள்