< Back
கிரிக்கெட்
முதல் ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு..!

Image Courtesy: @ICC

கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி; ஜிம்பாப்வேவுக்கு எதிராக டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு..!

தினத்தந்தி
|
6 Jan 2024 2:23 PM IST

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆடி வருகிறது

கொழும்பு,

ஜிம்பாப்வே கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று ஆடி வருகிறது. இதில் முதலாவதாக ஒருநாள் தொடர் நடைபெறுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் ஒருநாள் போட்டி கொழும்புவில் இன்று நடைபெறுகிறது.

இலங்கை அணி குசல் மெண்டிஸ் தலைமையிலும், ஜிம்பாப்வே அணி கிரேக் எர்வின் தலைமையிலும் களம் இறங்குகிறது. தொடரின் முதல் ஆட்டத்தை வெற்றியுடன் தொடங்க இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்