முதல் ஒருநாள் போட்டி: இங்கிலாந்துக்கு 334 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்கா
|தென் ஆப்பிரிக்க அணி தரப்பில் வான் டர் டசன் அதிகபட்சமாக 133 ரன்கள் குவித்தார்.
செஸ்டர் லி ஸ்ட்ரீட்,
தென் ஆப்பிரிக்க அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் இன்று நடைபெற்றுவரும் முதல் ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங்கை தேர்வுசெய்தது.
அதன்படி அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜன்னிமன் மலனும், குயிண்டன் டி காக்கும் களமிறங்கினர். மலன் 57 ரன்களிலும், டி காக் 19 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய வான் டர் டசன் - மார்க்ரம் ஜோடி பொறுப்புடன் விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. சிறப்பாக விளையாடிய வான் டர் டசன் சதமடித்து அசத்தினார். அவர் 133 ரன்களில் தன் விக்கெட்டை பறிகொடுத்தார். மார்க்ரம் தன் பங்குக்கு 77 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் தென் ஆப்பிரிக்க அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 333 ரன்கள் குவித்தது இதையடுத்து 334 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி விளையாடி வருகிறது.