< Back
கிரிக்கெட்
முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் நாளை பலப்பரீட்சை

Image Tweeted By @BCCI

கிரிக்கெட்

முதல் ஒரு நாள் போட்டி: இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் நாளை பலப்பரீட்சை

தினத்தந்தி
|
17 Aug 2022 9:05 PM IST

இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை நடக்கிறது.

ஹராரே,

லோகேஷ் ராகுல் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி ஹராரேயில் நாளை ( 18-ந்தேதி) நடக்கிறது.

இரு அணிகளும் கடைசியாக மோதிய 5 ஒருநாள் போட்டி யிலும் இந்தியாவே வெற்றி பெற்று இருந்தது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு அணிகள் இடையே ஒருநாள் போட்டி நடக்கிறது.

ரோகித் சர்மா , ரிஷப் பண்ட் , வீராட் கோலி, பும்ரா உள்ளிட்ட முன்னணி வீரர்களுக்கு இந்த தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. சஞ்சு சாம்சன் , இஷான் கிஷன் ஆகியோரில் ஒருவர் விக்கெட் கீப்பராக பணியாற்றுவர். வாஷிங்டன் சுந்தர் காயம் அடைந்ததால் அவர் இடத்துக்கு ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டு உள்ளார். நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி பிற்பகல் 12.45 மணிக்கு தொடங்குகிறது.

இந்தியா: லோகேஷ் ராகுல் (கேப்டன்), ஷிகர் தவான், ருதுராஜ் கெய்க்வாட், தீபக் ஹூடா, இஷான் கிஷன், சஞ்சு சாம்சன், சுப்மன் கில், ராகுல் திரிபாதி, அக்சர் படேல், ஷர்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், குல்தீப் யாதவ், தீபக் சாஹர், அவேஷ்கான், ஷபாஸ் அகமது

ஜிம்பாப்வே: ரெஜிஸ் சகபவா (கேப்டன்), சிக்கந்தர் ரசா, மில்டன் ஷிம்பா, தடிவான்ஷே, வெஸ்லி, ரியான் பர்ல், தனகா சிவங்கா, பிரட் இவான்ஸ், லுகே ஜாஸ்வே, இன்னோசன்ட் கய்யா, கைய்டினோ, கிளைவ் மடானே, ஜான் மகாரா, முன்யோங்கா, ரிச்சர்டு நகர்வா, விக்டர், டொனால்டு டிரிபினோ.

மேலும் செய்திகள்