< Back
கிரிக்கெட்
முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்
கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி: இந்தியா-நியூசிலாந்து அணிகள் நாளை மோதல்

தினத்தந்தி
|
24 Nov 2022 3:40 PM IST

முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) நடக்கிறது.

ஆக்லாந்து,

இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில் ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது. 3 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் முதல் ஆட்டம் ஆக்லாந்தில் நாளை (வெள்ளிக்கிழமை) பகல்-இரவாக நடக்கிறது.

இந்திய அணிக்கு ஷிகர் தவான் கேப்டனாக செயல்படுகிறார். வழக்கமான கேப்டன் ரோகித்சர்மா, முன்னாள் கேப்டன் விராட் கோலி, லோகேஷ் ராகுல் உள்ளிட்ட வீரர்களுக்கு நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டது. 20 ஓவர் தொடரில் கேப்டனாக இருந்து ஹர்திக் பாண்ட்யாவுக்கு ஒருநாள் தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-நியூசிலாந்து இடையே உள்ள நாளைய ஆட்டம் இந்திய நேரப்படி காலை 7 மணிக்கு தொடங்குகிறது. நியூசிலாந்து ஒருநாள் தொடரில் இந்தியா வெற்றியுடன் கணக்கை தொடங்குமா? என்று ஆவலுடன் எதிர் பார்க்கப்படுகிறது.

20 ஓவர் தொடரை இழந்த நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரை கைப்பற்றும் நோக்கில் உள்ளது.

மேலும் செய்திகள்