< Back
கிரிக்கெட்
முதல் ஒருநாள் போட்டி; பார்ட்லெட் அபார பந்துவீச்சு - வெஸ்ட் இண்டீஸ் 231 ரன்களில் ஆல் அவுட்

Image Courtesy: AFP

கிரிக்கெட்

முதல் ஒருநாள் போட்டி; பார்ட்லெட் அபார பந்துவீச்சு - வெஸ்ட் இண்டீஸ் 231 ரன்களில் ஆல் அவுட்

தினத்தந்தி
|
2 Feb 2024 1:21 PM IST

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் அதிகபட்சமாக கீசி கார்டி 88 ரன்கள் அடித்தார்.

மெல்போர்ன்,

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது. இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது ஒருநாள் போட்டி இன்று மெல்போர்னில் நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து வெஸ்ட் இண்டீசின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அலிக் அத்தானாஸ் 5 ரன், ஜஸ்டின் க்ரீவ்ஸ் 1 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையடுத்து களம் இறங்கிய கீசி கார்டி ஒரு புறம் நிலைத்து நின்று ஆட மறுமுனையில் களம் இறங்கிய ஷாய் ஹோப் 12 ரன், கவேம் ஹாட்ஜ் 11 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து கீசி கார்டியுடன் ரோஸ்டன் சேஸ் ஜோடி சேர்ந்தார்.

இருவரும் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் கீசி கார்டி 88 ரன், ரோஸ்டன் சேஸ் 50 ரன் எடுத்து அவுட் ஆகினர். இறுதியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 48.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 231 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது.

ஆஸ்திரேலிய தரப்பில் சேவியர் பார்ட்லெட் 4 விக்கெட்டும், சீன் அப்போட், கேமரூன் க்ரீன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். இதையடுத்து 232 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணி ஆடி வருகிறது.

மேலும் செய்திகள்