< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
முதல் ஒருநாள் போட்டி: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு
|4 Dec 2022 11:05 AM IST
இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளது.
மிர்புர்,
இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக வங்காளதேசம் சென்றுள்ளது. இந்தியா-வங்காளதேசம் அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மிர்புரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.
அண்மையில் நடந்த நியூசிலாந்து தொடரில் ஓய்வு அளிக்கப்பட்டு இருந்த கேப்டன் ரோகித் சர்மா, விராட்கோலி, லோகேஷ் ராகுல் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருக்கின்றனர். முன்னணி வீரர்கள் திரும்பி இருப்பதால் அணி மேலும் வலுப்பெற்று இருக்கிறது.
இந்நிலையில் இன்று நடைபெற இருக்கும் முதலாவது ஒருநாள் போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்துள்ளது.