முதலாவது ஒருநாள் போட்டி: வங்காளதேசம் அபார பந்து வீச்சு... இலங்கை 255 ரன்களில் ஆல் அவுட்
|வங்காளதேசம் - இலங்கை இடையிலான முதலாவது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது.
சட்டோகிராம்,
வங்காளதேசம் -இலங்கை இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதலாவது ஆட்டம் சட்டோகிராமில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணிக்கு டாப் 3 பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஆனால் பின் வரிசையில் ஜனித் லியனகே தவிர மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
அபாரமாக பந்து வீசிய வங்காளதேச பந்து வீச்சாளர்கள் இலங்கையை 48.5 ஓவர்களில் 255 ரன்களில் ஆல் அவுட் ஆக்கினர். இலங்கை தரப்பில் அதிகபட்சமாக ஜனித் லியனகே 67 ரன்களும், குசல் மெண்டிஸ் 59 ரன்களும் அடித்தனர். வங்காளதேசம் தரப்பில் சொரிபுல் இஸ்லாம், தஸ்கின் அகமது மற்றும் தன்சீம் ஹசன் சாகிப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
இதனையடுத்து இலக்கை நோக்கி வங்காளதேசம் பேட்டிங் செய்ய உள்ளது.