இந்தியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டி : வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சு தேர்வு
|டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது
போர்ட் ஆப் ஸ்பெயின்,
இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நிறைவு செய்த இந்திய கிரிக்கெட் அணி அடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. அங்கு 3 ஒரு நாள் மற்றும் ஐந்து 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் ஒரு நாள் போட்டிகள் (ஜூலை 22, 24 மற்றும் 27-ந்தேதி) டிரினிடாட்டின் போர்ட் ஆப் ஸ்பெயினில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடத்தப்படுகிறது. இதன்படி இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று நடக்கிறது.
ஒரு நாள் தொடருக்கான இந்திய அணியில் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட், ஹர்திக் பாண்ட்யா, முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகிய நட்சத்திர வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. . கேப்டனாக ஷிகர் தவான் நியமிக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.அதன்படி இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது .