< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
ஐ.சி.சி.-யின் எலைட் குழுவில் இணையும் முதல் வங்காளதேச நடுவர்
|29 March 2024 1:24 AM IST
இந்தியாவின் நித்தின் மேனன் தொடர்ந்து 5-வது ஆண்டாக எலைட் நடுவர் பிரிவில் நீடிக்கிறார்.
துபாய்,
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி), 12 பேர் மட்டுமே இடம் பெறும் பிரதான நடுவர்களின் பட்டியலில் (எலைட் பிரிவு) வங்காளதேசத்தின் ஷர்புத்தூலாவை புதிதாக சேர்த்துள்ளது. இதன் மூலம் எலைட் நடுவர் குழுவில் இணையும் முதல் வங்காளதேச நடுவர் என்ற சிறப்பை பெறுகிறார்.
அவர் இதுவரை 10 டெஸ்ட், 63 ஒருநாள், 44 இருபது ஓவர் போட்டிகளில் நடுவராக இருந்துள்ளார். அதே சமயம் இந்தியாவின் நித்தின் மேனன் தொடர்ந்து 5-வது ஆண்டாக எலைட் நடுவர் பிரிவில் நீடிக்கிறார்.