ஐ.பி.எல். தொடரில் பிடித்த எதிரணி மும்பையா? கொல்கத்தாவா? விராட் கோலி பதில்
|சர்வதேச கிரிக்கெட்டில் தனது 16-வது ஆண்டை விராட் கோலி நேற்று முன்தினம் நிறைவு செய்தார்.
புதுடெல்லி,
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் தன்னுடைய 16-வது வருடத்தை நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18-ம் தேதி) நிறைவு செய்துள்ளார். அவருக்கு பலரும் சமூக வலைதளங்களில் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
கடந்த 2008-ம் ஆண்டு 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு தலைமை தாங்கி கோப்பையை வென்று கொடுத்து சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான அவர் குறுகிய காலத்திலேயே நிலையான இடத்தை பிடிக்கும் அளவுக்கு இந்தியாவின் மேட்ச் வின்னராக அவதரித்தார்.
கிரிக்கெட்டில் 16 ஆண்டுகள் நிறைவடைந்ததை சிறப்பிக்கும் வகையில் நேற்று விராட் கோலியிடம் 16 கேள்விகள் கேட்கப்பட்டன. அதில் முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக ஐ.பி.எல். தொடரில் உங்களுக்கு பிடித்த எதிரணி மும்பையா? கொல்கத்தாவா? என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், "எனக்கு பிடித்த எதிரணி கொல்கத்தா நைட் ரைடர்ஸ்" என்று பதிலளித்தார்.