< Back
கிரிக்கெட்
சர்வதேச டி20 போட்டியில் அதிவேக சதம்: சாதனை படைத்த நமீபியா வீரர்
கிரிக்கெட்

சர்வதேச டி20 போட்டியில் அதிவேக சதம்: சாதனை படைத்த நமீபியா வீரர்

தினத்தந்தி
|
27 Feb 2024 5:03 PM IST

லோப்டி ஈடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

கிர்த்திபூர்,

நேபாளம் நாட்டில் முத்தரப்பு தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேபாளம், நமீபியா, நெதர்லாந்து ஆகிய அணிகள் மோதுகிறது. இதன் முதல் போட்டி இன்று நடைபெற்றது.

இதில் நமீபியா - நேபாளம் மோதின. இதில் டாஸ் வென்ற நமீபியா பேட்டிங்கை தேர்வு செய்தது.அதன்படி முதலில் ஆடிய நமீபியா 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக லோப்டி ஈடன் 101 ரன்கள் குவித்தார். இதனையடுத்து களமிறங்கிய நேபாளம் அணி 18.5 ஓவர்களில் 186 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டநாயகனாக லோப்டி ஈடன் தேர்வு செய்யப்பட்டார்.

இந்த டி20 போட்டியில் 33 பந்துகளில் லோப்டி ஈடன் சதம் அடித்தார். இதனால் லோப்டி ஈடன் சர்வதேச டி20 போட்டிகளில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

இதற்கு முன்னதாக நமீபியாவுக்கு எதிராக நேபாள வீரர் குசல் மல்லா 34 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை லோப்டி முறியடித்துள்ளார்.

மேலும் செய்திகள்