< Back
கிரிக்கெட்
பாகிஸ்தான் டி20 அணியில் உஸ்மான் காதிருக்கு பதில் பகார் ஜமான் சேர்ப்பு
கிரிக்கெட்

பாகிஸ்தான் டி20 அணியில் உஸ்மான் காதிருக்கு பதில் பகார் ஜமான் சேர்ப்பு

தினத்தந்தி
|
15 Oct 2022 5:46 AM IST

காயம் காரணமாக விலகியுள்ள உஸ்மான் காதிருக்கு பதிலாக பகார் ஜமான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

லாகூர்,

டி 20 உலக கோப்பை தொடருக்கான பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே, டி20 உலக கோப்பைக்கான பாகிஸ்தான் அணியின் சுழற்பந்து வீச்சாளர் உஸ்மான் காதிர் காயம் காரணமாக விலகியுள்ளார். இதனால் அவர் டி20 உலக கோப்பை தொடரில் விளையாடவில்லை.

இந்நிலையில், காயம் காரணமாக விலகியுள்ள உஸ்மான் காதிருக்கு பதிலாக பகார் ஜமான் அணியில் சேர்க்கப்பட்டு உள்ளார் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்