1.30 லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தியாவை எதிர்கொள்வது பெரிய சவாலாக இருக்கும் - ஸ்டீவ் ஸ்மித்
|இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது.
அகமதாபாத்,
10 அணிகள் கலந்து கொண்ட 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த தொடரின் லீக் சுற்றின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின. இதில் இந்திய அணி நியூசிலாந்தையும், ஆஸ்திரேலிய அணி தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறின.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டி வரும் 19ம் தேதி அகமதாபாத்தில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இறுதிப்போட்டியில் 1.30 லட்சம் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்தியாவை எதிர்கொள்வது பெரிய சவாலாக இருக்கும் என ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் கூறியதாவது,
இந்திய அணி சிறப்பாக விளையாடி வருகிறது. இதுவரை எந்தவொரு அணியும் இந்தியாவை வீழ்த்தவில்லை. அதே நேரத்தில் 1.30 லட்சம் பார்வையாளர்களுக்கு முன்பாக இந்தியாவை எதிர்கொள்வது சவாலானதாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
தென் ஆப்பிரிக்க அணியுடனான அரை இறுதி ஆட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு அவர் இதனை தெரிவித்தார்.