< Back
கிரிக்கெட்
ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட் தேர்வானதை ஏற்கமாட்டேன்- முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

Image Courtesy: AFP

கிரிக்கெட்

ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் ரிஷப் பண்ட் தேர்வானதை ஏற்கமாட்டேன்- முன்னாள் இந்திய வீரர் அதிருப்தி

தினத்தந்தி
|
31 Aug 2022 10:34 PM IST

கடந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்த பாண்டியாவிற்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

துபாய்,

15-வது ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் துபாயில் இன்று (புதன்கிழமை) நடக்கும் 4-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- ஹாங்காங் (ஏ பிரிவு) அணிகள் மோதி வருகின்றன. கடந்த போட்டியில் இந்திய அணிக்கு வெற்றி தேடி கொடுத்த ஹர்திக் பாண்டியாவிற்கு இந்த போட்டியில் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு பதில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற்றுள்ளார். இந்த போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. கோலி 59 ரன்கள் (44 பந்துகள்) சூர்யகுமார் யாதவ் 68 ரன்கள் (26 பந்துகள்) எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இந்த நிலையில் இந்த போட்டியில் ஹர்திக் பாண்டியாவிற்கு பதில் ரிஷப்-பை தேர்வு செய்ததற்கு இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் அதிருப்தி தெரிவித்துள்ளார். இது குறித்து கம்பீர் கூறுகையில், " ஹர்திக் பாண்டியாவுக்குப் பதிலாக ரிஷப் பண்ட் அணியில் இடம்பிடிப்பதை நான் ஏற்கமாட்டேன். பந்துவீசும் திறன் கொண்ட தீபக் ஹூடா போன்ற ஒருவர் என்னுடைய தேர்வில் நிச்சயமாக இருந்திருப்பார்.

என்னைப் பொறுத்தவரை தினேஷ் கார்த்திக்கிற்கு பதிலாக ரிஷப் பந்த் விளையாட வேண்டும். ஆனால் . நீங்கள் ஹர்திக் பாண்டியாவுக்கு ஓய்வு கொடுக்கிறீர்கள் என்றால், தீபக் ஹூடா தான் விளையாட தகுதியானவர் என்று நான் நினைக்கிறேன்" என தெரிவித்தார்.

மேலும் செய்திகள்