< Back
கிரிக்கெட்
முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி குடிபோதையில் தாக்குதல்; போலீசில் மனைவி புகார்
கிரிக்கெட்

முன்னாள் கிரிக்கெட் வீரர் காம்ப்ளி குடிபோதையில் தாக்குதல்; போலீசில் மனைவி புகார்

தினத்தந்தி
|
5 Feb 2023 8:36 AM IST

முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடிபோதையில் தாக்கியதில் காயம் ஏற்பட்டது என அவரது மனைவி போலீசில் புகார் அளித்து உள்ளார்.



புனே,


மராட்டியத்தின் பந்த்ரா (மேற்கு) பகுதியில் உள்ள பிளாட் ஒன்றில் முன்னாள் கிரிக்கெட் வீரர் வினோத் காம்ப்ளி குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில், காம்ப்ளி மீது அவரது மனைவி ஆண்ட்ரியா போலீசில் புகார் அளித்து உள்ளார்.

அதில், காம்ப்ளி நன்றாக குடித்து விட்டு, போதையில் பிளாட்டுக்கு திரும்பி வந்து உள்ளார். அப்போது, மனைவியை பார்த்து, தகாத வார்த்தைகளால் திட்டியபடி இருந்து உள்ளார். இதனை அவரது 12 வயது மகன் உடன் இருந்து பார்த்த சாட்சியாக உள்ளார்.

இதன்பின், காம்ப்ளி சமையலறைக்கு உள்ளே சென்று சமையல் செய்ய உபயோகப்படும் பாத்திரம் ஒன்றின் கைப்பிடியை எடுத்து வந்து மனைவி மீது வீசி இருக்கிறார். இதில், மனைவியின் தலையில் காயம் ஏற்பட்டு உள்ளது என புகாரில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதனை தொடர்ந்து, ஆபத்து விளைவிக்கும் ஆயுதங்களால் காயம் ஏற்படுத்துதல், அவமதிப்பு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் பந்திரா போலீசார் எப்.ஐ.ஆர். பதிவு செய்து உள்ளனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்