< Back
கிரிக்கெட்
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் விலகல்

image courtesy: AFP

கிரிக்கெட்

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் விலகல்

தினத்தந்தி
|
25 Aug 2024 1:54 PM GMT

ஜோஷ் ஹல் மாற்று வீரராக அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அதன் சொந்த மண்ணில் இலங்கைக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி முடிவடைந்த நிலையில், இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி வரும் 29-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்க உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரிலிருந்து காயம் காரணமாக இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட் விலகியுள்ளார். அவருக்கு பதிலாக ஜோஷ் ஹல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

மேலும் செய்திகள்