< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
நடப்பாண்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர் விலகல்
|7 Sept 2024 4:19 PM IST
முழங்கை காயம் காரணமாக அவர் நடப்பாண்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மார்க் வுட், முழங்கை காயம் காரணமாக நடப்பாண்டின் (2024-ம் ஆண்டின்) எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின்போது வலது முழங்கையில் அடிபட்டது. தற்போது நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் விளையாடிய அவர், லார்ட்ஸ் மற்றும் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் நடந்த இரண்டாவது மற்றும் மூன்றாவது டெஸ்ட் போட்டிகளில் இருந்து விலகினார்.
இந்நிலையில் ஸ்கேன் செய்து பார்த்ததில் அவருக்கு முழங்கையில் காயம் ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இதனால் நடப்பாண்டின் எஞ்சிய போட்டிகளில் இருந்து அவர் விலகியுள்ளார்.