< Back
கிரிக்கெட்
ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு...!

Image Courtesy: ICC Twitter 

கிரிக்கெட்

ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக இங்கிலாந்தின் ஹாரி புரூக் தேர்வு...!

தினத்தந்தி
|
10 Jan 2023 2:39 PM IST

ஐசிசி-யின் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரர், வீராங்கனை விருதை ஐசிசி அறிவித்துள்ளது.

துபாய்,

ஐசிசி ஒவ்வொரு மாதமும் சிறப்பாக செயல்படும் வீரர், வீராங்கனைகளை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு விருது வழங்கி வருகிறது. இந்நிலையில், டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கணையை ஐசிசி அறிவித்துள்ளது.

அதன்படி டிசம்பட் மாதத்திறகான சிறந்த வீரர் விருதை இங்கிலாந்தை சேர்ந்த அதிரடி ஆட்டக்காரர் 23 வயதான ஹாரி புரூக்குக்கு வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில் பாகிஸ்தானில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி 3-0 என்ற கணக்கில் கைப்பற்றியது. அந்த தொடரில் ஹாரி புரூக் தனது அபாரமான திறமையை வெளிப்படுத்தி 3 சதம் மற்றும் 1 அரைசதம் குவித்து அசத்தினார்.

மேலும், 2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலத்தில் ஹாரி புரூக் ஐதராபாத் அணியால் 13.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் டிசம்பர் மாதத்திற்கான சிறந்ஹ வீராங்கனை விருதை ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்ட்னர் கைப்பற்றி உள்ளார். கார்ட்னர் இங்கிலாந்தின் சார்லி டீன் மற்றும் நியூசிலாந்தின் சுசி பேட்ஸ் ஆகியோரை வீழ்த்தி இந்த விருதை கைப்பற்றி உள்ளார்.



Image Courtesy: ICC Twitter


Related Tags :
மேலும் செய்திகள்