< Back
கிரிக்கெட்
இங்கிலாந்துக்கு அந்த 4 பேரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும் - இயான் மோர்கன்

image courtesy: AFP

கிரிக்கெட்

இங்கிலாந்துக்கு அந்த 4 பேரில் ஒருவர் தலைமை பயிற்சியாளராக வந்தால் நன்றாக இருக்கும் - இயான் மோர்கன்

தினத்தந்தி
|
2 Aug 2024 4:24 PM IST

இங்கிலாந்து அணியின் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான பயிற்சியாளர் பதவியில் இருந்து மேத்யூ மாட் விலகினார்.

லண்டன்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளுக்கான தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து மேத்யூ மாட் சமீபத்தில் விலகினார். இதன் காரணமாக இடைக்கால பயிற்சியாளராக அந்த அணியின் முன்னாள் வீரரான மார்கஸ் டிரஸ்கோத்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் இயான் மோர்கன் சமீபத்தில் அளித்த பேட்டியில், "தற்போது இங்கிலாந்து அணி புதிய பயிற்சியாளரை தேடுகிறது. என்னை பொறுத்தவரை டிராவிட், பாண்டிங், பிளமிங் போன்ற ஜாம்பவான்களில் ஒருவர் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டால் அது நன்றாக இருக்கும். ஒருவேளை வேறு யாரும் தேவையில்லை என்று நினைத்தால் மெக்கல்லமே பயிற்சியாளராக இருக்கலாம். ஏனெனில் அவரது பயிற்சியின் கீழ் நமது அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது" என்று கூறினார்.

மேலும் செய்திகள்