இங்கிலாந்து டெஸ்ட் அணி அறிவிப்பு...ஆஷஸ் தொடரை தவறவிடும் ஆர்ச்சர்...?
|அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணியில் பேர்ஸ்டோ இடம் பிடித்துள்ளார்.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஜூன் மாதம் 1 ம் தேதி அயர்லாந்துக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆட உள்ளது. இந்த போட்டி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது.
இந்த தொடரை அடுத்து இங்கிலாந்து-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் இங்கிலாந்தில் நடைபெறுகிறது. ஆஷஸ் தொடரில் ஆட அயர்லாந்துக்கு எதிரான தொடர் ஒரு முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. ஆஷஸ் தொடரில் யாரெல்லாம் இடம் பெறுவார்கள் என கணிக்கவும் இந்த தொடர் முக்கியமாக பார்க்கபடுகிறது.
இந்நிலையில், அயர்லாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணிக்கு பென் ஸ்டோக்ஸ் தலைமை தாங்குகிறார். காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய பேர்ஸ்டோ அணியில் இடம் பிடித்துள்ளார்.
அதே வேளையில் காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் அணியில் இடம் பெறவில்லை. இதன் காரணமாக அவர் ஆஷஸ் தொடரிலும் இங்கிலாந்து அணியில் இணைவது சந்தேகமாகி உள்ளது.
அயர்லாந்து டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணி விவரம்:-
பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோனதான் பேர்ஸ்டோ, ஸ்டூவர்ட் பிராட், ஹாரி புரூக், ஜாக் க்ராவ்லி, பென் டக்கட், டான் லாரன்ஸ், ஜேக் லீச், ஓலி போப், மேத்யூ பாட்ஸ், ஓலி ராபின்சன், ஜோ ரூட், கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.