< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இந்திய டெஸ்ட் தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிப்பு!
|11 Dec 2023 6:14 PM IST
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது.
லண்டன்,
அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடுத்தாண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதி தொடங்க உள்ளது.
இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இந்த அணியில் 4 சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இங்கிலாந்து அணி விவரம் பின்வருமாறு;- பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ரெஹான் அகமது, ஜேம்ஸ் ஆண்டர்சன், கஸ் அட்கின்சன், ஜானி பேர்ஸ்டோ, ஷோயப் பஷீர், ஹாரி புரூக், சாக் க்ராலி, பென் டக்கெட், பென் போக்ஸ், டாம் ஹார்ட்லி, ஜாக் லீச், ஆலி போப், ஆலி ராபின்சன், ஜோ ரூட், மார்க் வூட்.