< Back
கிரிக்கெட்
கிரிக்கெட்
இங்கிலாந்து - இலங்கை முதலாவது டெஸ்ட் போட்டி இன்று தொடக்கம்
|21 Aug 2024 3:53 AM IST
இங்கிலாந்து - இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று நடைபெற உள்ளது.
மான்செஸ்டர்,
இலங்கை கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு உட்பட்ட தொடர் என்பதால் இரு அணிகளுக்கும் முக்கியமானதாக கருதப்படுகிறது.
இதனிடையே இங்கிலாந்து அணியின் வழக்கமான டெஸ்ட் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் காயம் காரணமாக விலகிய நிலையில், ஒல்லி போப் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை அணி தனஞ்ஜயா டி சில்வா தலைமையில் களமிறங்க உள்ளது.
இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள ஓல்டு டிராப்போர்டில் இந்திய நேரப்படி இன்று மாலை 3.30 மணியளவில் தொடங்க உள்ளது.