< Back
கிரிக்கெட்
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்

கோப்புப்படம் 

கிரிக்கெட்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்த இங்கிலாந்து வீரர்

தினத்தந்தி
|
8 Sept 2024 10:30 AM IST

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார்.

லண்டன்,

இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் மொயீன் அலி (வயது 37). இவர் இங்கிலாந்து அணிக்காக 68 டெஸ்ட், 138 ஒருநாள் மற்றும் 92 டி20 போட்டிகளில் ஆடி உள்ளார். மேலும் 67 ஐ.பி.எல் போட்டிகளிலும், உலக அளவில் நடைபெறும் டி20 லீக் கிரிக்கெட்களிலும் கலந்து கொண்டு ஆடி வருகிறார்.

இவர் 2019 ஒருநாள் உலகக்கோப்பை மற்றும் 2022 டி20 உலகக்கோப்பை வென்ற இங்கிலாந்து அணியில் இடம்பெற்றிருந்தார். மிகச்சிறந்த ஆல்ரவுண்டர்களில் ஒருவராக கருதப்பட்ட மொயீன் அலிக்கு எதிர்வரும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடருக்கான இங்கிலாந்து அணியில் இடம் கிடைக்கவில்லை.

இந்நிலையில், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மொயீன் அலி அறிவித்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளனர். ஓய்வு குறித்து சமீபத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் நாசர் ஹுசைன் உடன் ஒரு பேட்டியில் மொயீன் அலி கூறியதாவது, சர்வதேச கிரிக்கெட்டில் இங்கிலாந்து அணிக்காக விளையாடியது என் வாழ்நாளில் மறக்க முடியாத விஷயம். மீண்டும் இங்கிலாந்து அணிக்காக கிரிக்கெட் விளையாட முயற்சி செய்யலாம், ஆனால் நான் உண்மையில் விளையாட மாட்டேன் என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் ஓய்வு முடிவை அறிவித்தாலும் அது குறித்து வருத்தப்பட மாட்டேன்.

ஏனென்றால் நான் தற்போது போதுமான நிலையில் இல்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் இன்னமும் விளையாட முடியும் என்று உணர்கிறேன். ஆனால் ஒரு அணியாக இங்கிலாந்து கிரிக்கெட் ஒரு மறுசுழற்சியை எதிர்பார்க்கிறது என்பதை புரிந்து கொள்கிறேன். அதனால் நான் யோசித்து இந்த முடிவை எடுத்திருக்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்