< Back
கிரிக்கெட்
இங்கிலாந்து - பாகிஸ்தான்  இடையிலான 3-வது டி20 போட்டி மழையால் ரத்து

Image : Pakistan Cricket

கிரிக்கெட்

இங்கிலாந்து - பாகிஸ்தான் இடையிலான 3-வது டி20 போட்டி மழையால் ரத்து

தினத்தந்தி
|
29 May 2024 3:24 PM IST

மழை தொடர்ந்து பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் போட்டி கைவிடப்பட்டது.

கார்டிப்,

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து நான்கு ஆட்டம் கொண்ட டி20 போட்டித்தொடரில் விளையாடி வருகிறது. இரு அணிகளும் நேற்று கார்டிப்பில் மூன்றாவது 20 ஓவர் போட்டியில் மோத இருந்தன.ஆனால் மழை தொடர்ந்து பெய்ததால் ஒரு பந்து கூட வீசாமல் அப்போட்டி கைவிடப்பட்டது.

இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. 2-வது போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. 4-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை ஓவலில் நடக்கிறது.

மேலும் செய்திகள்