இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் - மான்டி பனேசர்
|இந்தியா - இங்கிலாந்து இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
லண்டன்,
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 25-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில் இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும் என்று அந்த அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் மான்டி பனேசர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், "சுழலும் பந்துகளை இந்திய பேட்ஸ்மேன்கள் அட்டாக் செய்வார்கள். சுழற்பந்து வீச்சுக்கு எதிராக அவர்கள் பயமின்றி விளையாடுவார்கள். குறிப்பாக இந்திய அணிக்கு ரோகித் சர்மா ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரராக இருப்பார். சுழலுக்கு சாதகமான மைதானங்களில் அவர் ஆஸ்திரேலிய ஜாம்பவான் டான் பிராட்மேன் போல அதிரடியாக விளையாடுவார். அவருடைய புள்ளி விவரங்களும் நம்ப முடியாததாக இருக்கிறது. எனவே இங்கிலாந்து இந்த தொடரை வெல்ல விரும்பினால் ரோகித் சர்மாவை விரைவாக அவுட் செய்ய வேண்டும்" என்று கூறினார்.